நாட்டில் மேலும் நால்வர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன்படி, கொழும்பு-12 பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய ஆணொருவர் கடந்த 29ஆம் திகதி உயிரிழந்தார்.
இவரது மரணத்திற்கான காரணம், பக்கவாதம் மற்றும் கொவிட் -19 வைரஸ் தொற்றுடன் ஏற்பட்ட கிருமித் தொற்று எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன். கொலன்னாவ பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய பெண்ணொருவர் கடந்த 29ஆம் திகதி அவரது வீட்டில் உயிரிழந்தார்.
இவருக்கு, மூளைக்குள் இரத்தப்போக்குடன் கொரோனா தொற்று ஏற்பட்டமையே மரணத்திற்கான காரணமாகும்.
மேலும், ராஜகிரியவைச் சேர்ந்த 93 வயதுடைய பெண் கடந்த 28ஆம் திகதி அவரது வீட்டில் உயிரிழந்தார். இவரது இறப்புக்கான காரணம் இரத்தம் விஷமானமை, தோல் தொற்று மற்றும் கொரோனா தொற்று என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கொழும்பு-10 பகுதியைச் சேர்ந்த 81 வயதுடைய ஆணொருவர் தனியார் மருத்துவமனையொன்றில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, முல்லேரியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இவர் கடந்த 30ஆம் திகதி மரணித்துள்ள நிலையில், நாட்பட்ட நுரையீரல் தொற்றுடன் கொரோனா தொற்று ஏற்பட்டமையே மரணத்திற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 122ஆக அதிகரித்துள்ளது.









No comments