Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மேற்கத்திய மருந்தை போதைப்பொருளாகப் பயன்படுத்த முடியாது



மேற்கத்திய மருத்துவத்தில் போதைப்பொருளாக பயன்படுத்தக்கூடிய மருந்து எதுவும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

மஹர சிறைச்சாலையின் கைதிகள், மனநிலை சரியில்லாத நபர்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகளை உட்கொண்டதால் கட்டுக்கடங்காத முறையில் ஈடுபட்டதாக அமைச்சர் விமல் வீரவன்ச கூறியிருந்தார்.

அமைச்சர் விமல் வீரவன்ச நாடாளுமன்றில் தெரிவித்த கருத்து தொடர்பாக, இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே ராஜித சேனாரத்ன இவ்வாறு கூறினார்.

கைதிகளின் மரணங்களை மறைக்கும் முயற்சியில் இதுபோன்ற அப்பட்டமான பொய்கள் கூறப்படுகின்றன என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

அத்தோடு குறித்த கருத்துக்கள் முட்டாள்தனமானவை என குறிப்பிட்ட ராஜித சேனாரத்ன இதனை தேசிய மனநல நிலையமும் மறுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்

No comments