Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து விடுபட இறைவனை பிராத்திப்போம்



மக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து விரைவாக விடுபட, நத்தார் காலத்தில் இறைவனை வேண்டுவோம் என மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.

மன்னார் மறைமாவட்டத்தின் நத்தார் திருவிழா தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை மேலும் கூறியுள்ளதாவது, “இவ்வருடம் நத்தார் திருவிழாவை நாங்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும்.

எமக்கு மகிழ்ச்சியை கொண்டு வரும் யேசுநாதர் பிறப்பு விழாவை நாங்கள் கொண்டாடுகின்றோம்.

இவ்வருடம் கொவிட்  நோய் காரணமாக பலர் துன்பப்படுகின்றனர். தொழில் இல்லாத பிரச்சினை, உணவை பெற்றுக் கொள்ளுவதற்கும் எத்தனையோ தடைகள், கட்டுப்பாட்டுக்குள் உள்ள மக்களும் பல்வேறு விதமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆகையினால் நாங்கள் அவர்களையும் நினைத்து இவ்வருடம் வெளி ஆடம்பரங்களை குறைத்து, நத்தாரை கொண்டாடுவோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments