Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கிறிஸ்மஸ் அலங்காரத்திற்காக சவுக்கு வெட்டியவர்கள் கைது!



அரச காணிக்குள் அத்துமீறி சட்டத்துக்குப் புறம்பாக உள்நுழைந்தமை மற்றும் அரசுக்குச் சொந்தமான சவுக்கு மரத்தை  வெட்டிய குற்றச்சாட்டில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேக நபர்கள் பயன்படுத்திய 3 பட்டா வாகனங்களும் பொலிசாரினால் கைப்பற்றப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. 

இந்தக் கைது நடவடிக்கை நேற்று மாலை வடமராட்சி கிழக்கு, மணற்காடு பிரதேசத்தில் இடம்பெற்றது.

சந்தேக நபர்கள் மானிப்பாய், நல்லூர், யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் , கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு அலங்கரிப்பு வேலைகளுக்காக சவுக்கு வெட்டியதாக விசாரணைகளில் தெரிவித்தார்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். 

No comments