நாட்டில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் கொழும்பு-13 பகுதியைச் சேர்ந்த 82 வயதுடைய பெண் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தநிலையில் நேற்று உயிரிழந்தார்.
இவரது இறப்புக்கு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொரோனா தொற்று நிமோனியா எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 147ஆக அதிகரித்துள்ளது.
No comments