Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தவறணை காவலாளி சடலமாக மீட்பு!



யாழ்.சாவகச்சேரி பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தின் கீழுள்ள கள்ளு தவறணையில் இருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

சாவகச்சேரியை சேர்ந்த சின்னராசா ஜெகன் (வயது 39) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

குறித்த நபர் கள்ளு தவறணையில் காவலாளியாக கடமையாற்றி வருகின்றார். வழமை போன்று நேற்று முன்தினம் இரவு காவல் கடமைக்காக சென்றுள்ளார். 

மறுநாள் காலை முகாமையாளர் தவறணையை திறக்க சென்ற போது , காவலாளி உயிரிழந்த நிலையில் காணப்பட்டதனை அடுத்து சாவகச்சேரி பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். 

அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தினை மீட்டு , பிரேத பரிசோதனைக்காக சாவகச்சேரி வைத்திய சாலையில் ஒப்படைத்துள்ளனர். 

No comments