Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கொரோனா தடுப்பூசி திறன்மிக்கது- வைத்தியர் கேசவன்



இலங்கையில் தற்போது செலுத்தப்படுகின்ற கொரோனா தடுப்பூசி, திறன்மிக்க தடுப்பூசியாகும். அதனை அனைவரும் பெற்றுக்கொள்ள வேண்டும் என தொற்று நோய் வைத்திய நிபுணர் வைத்தியர் கேசவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கை முழுவதும் கொரோனா தடுப்பூசி  செலுத்தும் செயற்பாடு நேற்று (வெள்ளிக்கிழமை) முதல் முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில்  வடக்கு மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி  செலுத்தும் செயற்பாடு இன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த தடுப்பூசி  செலுத்தும் செயற்பாடு தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே வைத்தியர் கேசவன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இது ஒரு பாதுகாப்பான தடுப்பூசியாகும்.  ஆகையினால்  பக்கவிளைவுகள் மிக மிக குறைவு. இது மிகவும் திறன்மிக்க தடுப்பூசியாகும்.

எனவே பொதுமக்கள் அனைவரையும் தடுப்பூசியை போட்டுக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுகிறேன். நான் என்னை நேசிக்கின்றேன், எனது குடும்பத்தை நேசிக்கின்றேன், எனது சமூகத்தை நேசிக்கின்றேன், எனது நாட்டை நேசிக்கிறேன் அதனால் நான் தடுப்பூசி போடுகின்றேன்

எனவே அனைவரும் இந்த தடுப்பூசியினைபோட்டுக்கொள்ள வேண்டும்” என  அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments