Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கடந்த 24 மணிநேரத்தில் 39 விமான சேவைகள் இலங்கையில் முன்னெடுப்பு



இலங்கையில்  கடந்த 24 மணிநேரத்தில் 39 விமான சேவைகள் ஊடாக ஆயிரத்து 135 பேர் பயணங்களை மேற்கொண்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 அளவில் நிறைவடைந்த 24 மணிநேர காலப்பகுதிக்குள், குறித்த பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய தகவல்கள் ஊடாக அறிய முடிகின்றது.

இதேவேளை  கொரோனா தொற்று அச்ச நிலைமை காரணமாக 681 பேர் 20 விமானங்களின் ஊடாக நாடு திரும்பியுள்ளனர்.

இதேபோன்று தொழில்  நிமித்தம் கட்டார் சென்றிருந்த நிலையில் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியதாக கூறப்பபடும் 293 பேர் நாடு திரும்பியுள்ளனர்.

இவர்கள் அனைவரும் அரசாங்கத்தின் விசேட வேலைத்திட்டத்தின் ஊடாகவே நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இதற்கமைய  டுபாயிலிருந்து 83 பேரும் அபுதாபியிலிருந்து 77 பேரும் பாகிஸ்தானிலிருந்து 39 பேரும் பங்களாதேஷிலிருந்து 34 பேரும் இவ்வாறு நாட்டுக்கு அழைத்த வரப்பட்டுள்ளனர்.

குறித்த அனைவருக்கும் விமான நிலையத்திலேயே பி.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு, தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments