Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பருத்தித்துறை பகுதியில் எஸ்.ரி.எப்பின் தாக்குதலுக்கு இலக்கானவர்கள் வைத்திய சாலையில்



பருத்தித்துறையில் கஞ்சா போதைப்பொருள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து வீடொன்றை சிறப்பு அதிரடிப் படையினர் சுற்றிவளைத்த நிலையில் ஏற்பட்ட முறுகலில் இரண்டு பொதுமகன்களும் சிறப்பு அதிரடிப் படை உத்தியோகத்தரும் காயமடைந்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த குடும்பத்தலைவர் ஒருவரும் குடும்பப்பெண் ஒருவரும் மந்திகை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
 
அதேவேளை சிறு காயங்களுக்கு உள்ளான சிறப்பு அதிரடிப் படை உத்தியோகத்தர் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை பருத்தித்துறை தும்பளை எல்லை வீதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வீட்டுக்குச் சென்ற சிறப்பு அதிரடிப் படையினர் கஞ்சா போதைப்பொருள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாகவும் தேடுதல் நடத்தப்போவதாகக் கோரினர்.

 எனினும் அவ்வாறு கஞ்சா பதுக்கிவைத்திருக்கவில்லை என்று வீட்டின் உரிமையாளர் கூறியுள்ளார்.

அதனையடுத்து சிறப்பு அதிரடிப் படையினருக்கும் அந்தக் குடும்பத்துக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது. அதனை அடுத்து கைக் கலப்பு ஏற்பட்டுள்ளது. அதனை அடுத்து சிறப்பு அதிரடிப் படையினர் வான் நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

சிறப்பு அதிரடிப் படையினரின் தாக்குதலில் காயங்களுக்குள்ளானதாக குடும்பத்தலைவரும் குடும்பப் பெண் ஒருவரும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேவேளை சிறப்பு அதிரடி படையினை சேர்ந்தவரும் காயத்திற்கு உள்ளானார். 

தமது உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொண்ட நபர்அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார் என்றும், தமது வாகனத்துக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாகவும்  சிறப்பு அதிரடிப் படையினர் பருத்தித்துறை பொலிஸில் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
 
அதேவேளை குறித்த வீட்டைச் சேர்ந்த இருவரை அழைத்து வந்த பொலிஸார், பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments