Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பி.சி.ஆர். சோதனை நடவடிக்கைகளில் கலந்துகொள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு


 

நாடாளுமன்ற வளாகத்தில் நாளை நடைபெறவுள்ள பி.சி.ஆர். சோதனை நடவடிக்கைகளில் கலந்துகொள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை பி.சி.ஆர் சோதனை நடத்தப்படும் என நாடாளுமன்ற படைகள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ அறிவித்துள்ளார்.

குறித்த பரிசோதனை நடவடிக்கைகள் வாரத்திற்கு ஒருமுறையும் நாடாளுமன்ற அமர்வு வாரங்களிலும், அமர்வுகள் இடம்பெறாத காலப்பகுதியிலும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத் திணைக்களத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்படுகின்றது.

2021 ஜனவரி மாதம் 13 ஆம் திகதி முதல் இதுவரை நாடாளுமன்ற வளாகத்தில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையின் படி இறுதியாக 25 ஆம் திகதி190 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் இதில் எவருக்கும் தொற்று ஏற்படவில்லையென்பது உறுதிப்படுத்தப்பட்டது

No comments