Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

"வங்கி கடனை மீள் செலுத்தவே கசிப்பு விற்றேன்" - கசிப்புடன் கைது செய்யப்பட்டவர் வாக்கு மூலம்!



வங்கியில் பெற்ற கடனை மீள செலுத்த கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டேன் என கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட குற்ற சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் விசாரணையின் போது வாக்கு மூலம் அளித்துள்ளார். 

சாவகச்சேரி மீசாலை மேற்கு பகுதியில் கசிப்பு உற்பத்தி தொடர்பான தகவல் மது வரித்திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைக்க பெற்றதை அடுத்து அவ்விடத்திற்கு சென்ற அதிகாரிகள் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டார் எனும் குற்றச்சாட்டில் ஒருவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து பெருமளவான கசிப்பினையும் மீட்டிருந்தனர். 

அவரிடம் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்த போது , தான் வங்கியில் பெற்ற கடனை மீள செலுத்துவதற்கு அதிக வருமானம் தேவையாக உள்ளமையால் தான் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டேன் என தெரிவித்துள்ளார். 

குறித்த நபரை நீதிமன்றில் முற்படுத்தி சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்

No comments