Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

புகையிரத விபத்து - 12 பேர் காயம் ; புகையிரத சேவைகள் ஸ்தம்பிதம்


களனி மற்றும் வனவாசல தொடருந்து நிலையங்களுக்கு இடையே இன்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற புகையிரத விபத்தில், பெட்டி ஒன்று தடம் புரண்டதில் 12 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வனவாசல மற்றும் ஹுனுபிட்டியா இடையேயான இரயில் பாதையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், இதன் காரணமாக பிரதான தொடருந்து பாதையின் போக்குவரத்துக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொல்கஹாவெலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தொடருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தில் சிறு காயங்களுக்கு உள்ளான 12 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த விபத்துக்கான காரணம் தொடர்பில் தொடருந்து திணைக்கள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.






No comments