Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வவுனியாவில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞர் வைத்தியசாலையில்



வவுனியா – செட்டிகுளம் முசல்குத்தி காட்டுப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய நிலையில் மீட்கப்பட்ட இளைஞர் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் நேற்று மாலை 5 மணியளவில் முசல்குத்தி காட்டுப் பகுதிக்குச் சென்றிருந்த நிலையில் அவர் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் படுகாயமடைந்த அவர் மீட்கப்பட்டு செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் முதலியார்குளம் பகுதியைச் சேர்ந்த அன்ரனி ஜெறின் (வயது 36) என்ற நபரே படுகாயமடைந்துள்ளார்.

துப்பாக்கி சூட்டை மேற்கொண்டவர்கள் தொடர்பான தகவல்கள் இதுவரையில் வெளிவரவில்லை.

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார்  முன்னெடுத்து வருகின்றனர்

No comments