Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கொரோனாவால் 83 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு – 471 பேர் உயிரிழப்பு



இலங்கையில் மேலும் 350 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 83 ஆயிரத்து 94 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 78 ஆயிரத்து 947 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான மூவாயிரத்து 683 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, நாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று உறுதிப்படுத்தியுள்ளார்.

இவ்வாறு, உயிரிழந்தவர்களில், 51, 55, 56, 59, 81 மற்றும் 87 வயதான ஆறு ஆண்களும், 79 வயதான பெண் ஒருவரும் உள்ளடங்குகின்றனர் என அரசத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 471 ஆக அதிகரித்துள்ளது.

இதேநேரம், நாட்டில் இதுவரையில், 4 இலட்சத்து 66 ஆயிரத்து 350 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

நேற்றைய தினம் மாத்திரம் 24 ஆயிரத்து 374 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments