ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக்க விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் 65 பிரதிகள் சட்டமா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலாளரால் குறித்த பிரதிகள் ஒப்படைக்கப்படட்டதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷார ஜயரத்ன தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பான சாட்சிகளின் முக்கியத் தன்மை காரணமாக 22 பிரதிகள், சட்டமா அதிபருக்கு கையளிக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
2019 ஆம் ஆண்டின் 08 பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பாக 30,000 க்கும் மேற்பட்ட சாட்சியங்கள் மற்றும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் சாட்சியங்கள் குறித்து ஆராயப்படும் என்றும் கூறினார்.
இதேவேளை தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதற்காக விசாரணைகள் உரிய முறையில் நடைபெறும் என சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.
No comments