இனிவரும் காலங்களில் கனரக சாரதிகளுக்கான அனுமதி பத்திரம் கொண்டவர்களுக்கு பயணிகள் பஸ் செலுத்துவதற்கான அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொண்டதினால் மாத்திரம் பயணிகள் போக்குவரத்து பஸ்களை செலுத்த முடியாது என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இது தொடர்அபில் அவர் மேலும் குறிப்பிடுகையில், அதிகரித்து வரும் பஸ் விபத்துக்கள் காரணமாக சாரதி அனுமதி பத்திரத்தினை புதிதாக அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிட்டார்.
இதனால் பொது போக்குவரத்து சாரதிகள் அனுமதி பத்திரம் அறிமுகம் செய்யப்படும். அந்த சாரதிக்கு இரண்டு வாரங்களுக்கு விசேட பயறிச்சி வழங்கப்படவுள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
No comments