அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தான் எந்த சந்தர்ப்பத்திலும் மன்னிப்பு கோரவில்லை எனவும் , அவர் தன்னுடன் கதைக்கவே இல்லை எனவும் உதயன் பத்திரிகை நிர்வாகியும் , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈ. சரவணபவன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு உதயன் பத்திரிகையில் வெளிவந்த செய்தி தொடர்பாக, கெளரவ அமைச்சர் அவர்கள், உதயன் பத்திரிகை உரிமையாளர் சரா அவர்களிடம் உடனடியாக தொலைபேசியில் கேட்டபொழுது, "அது... செய்தி ஆசிரியரின் பிழையென்றும், தான் அதற்காக மன்னிப்பு கேட்பதோடு, இனி அவ்வாறு தவறு நடக்காது" என்றும் கேட்டுக்கொண்டார் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வவுனியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குணசிங்கம் திலீபன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பில்
உதயன் பத்திரிகை நிர்வாகியும் , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈ. சரவணபவனிடம் கேட்ட போது , டக்ளஸ் எனக்கு எந்த சந்தர்ப்பத்திலும் தொலைபேசி அழைப்பு எடுக்கவில்லை, அவருடன் கதைக்க வேண்டிய தேவை எதுவும் இல்லை. அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய நிலையில் நான் இல்லை. அவர்கள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பொய்யான கருத்தை வெளியிட்டுள்ளார். தவறான தகவல்களை பரப்புகிறார் என தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் திலீபனின் முகநூல் பதிவு
No comments