இந்தமாதம் 26,27,28 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவிருந்த யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக சந்தை மற்றும் கண்காட்சி யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு ஒத்திவைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரால் விடுக்கப்பட்ட கோரிக்கையையடுத்து ஒத்திவைக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஒழுங்கமைப்பாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 11வருடங்களாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் நிலையில் இவ்வருடத்துக்கான ஏற்பாடுகள் யாழ் முற்றவெளி மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments