வாகனங்களில் உள்ள குறைபாடுகளை பரிசோதிப்பதற்காக விசேட நடவடிக்கையொன்று இன்று முதல் எதிர்வரும் 24 ஆம் திகதி வரையிலும் நாடு பூராகவும் மேற்கொள்ளப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
வாகன விபத்துகளினால் நாளொன்றிற்கு கிட்டத்தட்ட 40 பேர் காயங்களுக்குள்ளாகின்றனர். நேற்றைய தினம் வாகன விபத்துக்களின் மூலம் 8 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் கவனயீனமாக வாகனம் செலுத்துதல், வாகனங்களில் உள்ள குறைபாடுகள் மற்றும் மது போதையுடன் வாகனங்களைச் செலுத்துதல் போன்றன வாகன விபத்துக்கள் இடம்பெறுவதற்கான முக்கிய காரணங்களாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும் வாகனங்களின் பயன்படுத்த முடியாத டயர்கள் (தேய்ந்திருந்தால்) அது தொடர்பாகவும் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்
No comments