பதுளை பசறை பேருந்து விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15ஆக உயர்வடைந்துள்ளது.
இதில் 09ஆண்களும் 06 பெண்களுமாக 15 பேர் உயிரிழந்துள்ளனர். அதேவேளை இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதுடன் 09 பேருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு அதிகளவான இரத்தம் தேவைப்படுவதனினால் இரத்த தானம் செய்ய விரும்புவோர் பதுளை வைத்திய சாலைக்கு சென்று இரத்த தானம் வழங்குமாறும் கோரப்பட்டுள்ளது.
இதேவேளை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதற்கட்டமாக 15,000 ரூபாய் நிதியை உடன் வழங்க செந்தில் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளார்.
No comments