Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கொரோனா மரணம் 520ஆக உயர்வு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 5பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 520 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை நாட்டில் நேற்றைய தினம் மாத்திரம் 304பேர், புதிய கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கையானது 86,989 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களில் 288 பேர், மினுவாங்கொட- பேலியகொட கொரோனா கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்கள் ஆவர்.

ஏனைய 12 பேர் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்களும் நான்கு பேர் சிறைச்சாலை கொத்தணியுடனும் தொடர்புடையவர்கள் ஆவர்.

அந்தவகையில் மினுவாங்கொட – பேலியகொட கொரோனாகொத்தணிப் பரவலில் சிக்கிய நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 82,640 ஆக பதிவாகியுள்ளது.

இதேவேளை  நேற்றைய தினம், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 351 நோயாளர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 83,561 ஆக காணப்படுகிறது.

மேலும் தற்போது, நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் 2,908 பேர், தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதுடன், சந்தேகத்தில் 383 பேர் வைத்தியக் கண்காணிப்பிலும் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

No comments