Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

சட்டவிரோதமான முறையில் கனடாவுக்கு செல்ல முயற்சித்த 24 பேர் கைது!

சட்டவிரோதமான முறையில் கனடாவுக்கு செல்ல முயற்சித்த 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடல் வழியாக செல்லும் நோக்கில் கற்பிட்டி குரக்கன்ஹேன பிரதேசத்திலுள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த 24 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

கற்பிட்டி கடற்படையினரால் நேற்று(வியாழக்கிழமை) இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களை அழைத்து செல்வதற்காக பயன்படுத்தப்பட்ட லொறி ஒன்றையும் பொலிஸார் தங்கள் பொறுப்பில் எடுத்துள்ளனர்.

இந்த சந்தேக நபர்களுக்குள் சிறு பிள்ளைகள் இரண்டும் பெண் ஒருவரும் உள்ளடங்குவதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் அனைவரும் மட்டக்களப்பு பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்

No comments