இலங்கை தமிழ் மக்களின் வாழ்க்கை மற்றும் போராட்டம் சம்பந்தமாக சினம்கொள் திரைப்படம் யாழ் சர்வதேச திரைப்பட விழாவில் வெளியாக உள்ளது. இன்றைய தினம் ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு காகில்ஸ் சதுக்கத்தில் உள்ள ரீகல் சினிமாவில் இத் திரைப்படத்தின் காட்சி இடம்பெறவுள்ளது.
2009இற்குப் பின்னர் தடுப்புச் சிறையில் இருந்து வெளியாகும் முன்னாள் போராளி ஒருவரின் நிகழ்கால வாழ்க்கை தொடர்பான இத் திரைப்படம் ஈழத்தின் இன்றைய நிலையையும் முன்னாள் போராளிகள் குறித்தும் பேசுகின்றது.
தென்னிந்திய திரைத்துறையினரின் பாராட்டை பெற்ற இத் திரைப்படம், புலம்பெயர் நாடுகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. அரவிந்த் நர்வினி டெரி நடித்துள்ள இத் திரைப்படத்திற்கு என்.ஆர். ரகுநந்தன் இசையமைக்க, தீபச்செல்வன் பாடல்களையும் வசனத்தையும் எழுத்தியுள்ளார்.
பிச்சைக்காரன் படத்தின் இயக்குனர் சசியின் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ள ரஞ்சித் ஜோசப் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். இலங்கை மற்றும் தென்னிந்திய நடிகர்களின் நடிப்பில் உருவாக்கியுள்ள இந்தப் படம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் காட்சியாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments