ஓமந்தை பகுதியில், தற்காலிகமாக அமைக்கப்பட்ட இராணுவ சோதனைச் சாவடியை நிரந்தரமாக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. அதன் போது, வவுனியா ஓமந்தை உள்ளிட்ட பகுதிகளில், இராணுவ சோதனைசாவடிகள் அமைக்கப்பட்டு மக்கள் கண்காணிக்கப்பட்டனர்..
இந்நிலையில் தற்போது குறித்த சோதனை சாவடியை நிரந்தரமாக்கும் முயற்சியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
No comments