Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மியான்மார் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்புக்கு பின் இதுவரை 250 பேர் கொலை



மியான்மாரில் கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதி இடம்பெற்ற இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கையை தொடர்ந்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் இதுவரை 250 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக நாடு முழுவதும் உள்ள சிறிய நகரங்களில் பலர், சனிக்கிழமை இரவு மெழுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த வன்முறையும் அடக்குமுறையும் மேற்கத்திய அரசாங்கங்களின் கண்டனத்தையும், மியான்மாரின் அருகில் உள்ள சில ஆசிய அண்டை நாடுகளின் விமர்சனத்தையும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்த வன்முறை இராணுவ ஆட்சியில் இருந்து ஜனநாயகத்தை மீட்டெடுத்து நல்லாட்சிக்கு திரும்புவதை நோக்கமாக கொண்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்பிரகாரம் நேற்று இரவு கச்சின் மாநிலத்தில் உள்ள சிறிய சமூகங்கள் மற்றும் தெற்கே நகரமான காவ்தாங் வரை சுமார் 20 ஆர்ப்பாட்டங்கள் நாடு முழுவதும் ஒரே இரவில் நடத்தப்பட்டன என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற தனித்தனியான சம்பவங்களில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டனர். இது ஆட்சி கவிழ்ப்பின் பின்னர் ஏற்பட்ட இறப்பு எண்ணிக்கையை 247 ஆக கொண்டுவந்துள்ளது.

No comments