நாட்டில் இன்று ஆயிரத்து 636 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்தர சில்வா தெரிவித்துள்ளார். www.tamilnews1.com
இதன்படி, இலங்கையில் ஒரேநாளில் அதிகளவான கொரோளா தொற்றாளர்கள் இன்று கண்டறியப்பட்டுள்ளமை பதிவாகியுள்ளது.
இந்நிலையில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து எட்டாயிரத்து 146ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், நாட்டில் மேலும் 530 பேர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றிலிருந்து மீண்டோரின் மொத்த எண்ணிக்கை 95ஆயிரத்து 975ஆகப் பதிவாகியுள்ளது.
மேலும், 11 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்தமை இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் , உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 678 ஆக அதிகரித்துள்ளது. www.tamilnews1.com
இன்னும் 11 ஆயிரத்து 504 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர். www.tamilnews1.com









No comments