Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மணல் கடத்தலை தடுக்க சென்றவர் மீது தாக்குதல்!

 


யாழ்ப்பாணம் - தென்மராட்சி, கொடிகாமம் - பாலாவி பகுதியில் உள்ள தனது வயல் காணியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்களை தடுக்க முற்பட்ட காணி உரிமையாளர் தாக்குதலுக்கு உள்ளாகி, படுகாயமடைந்துள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற இச் சம்பவம் தொடர்பில் ,  மேலும் தெரியவருவதாவது,

கொடிகாமம் - பாலாவி பகுதியில் உள்ள வயல் காணியில் சட்டவிரோதமான முறையில் சிலர் உழவு இயந்திரங்கள் மூலம் மணல் அகழ்வில் ஈடுபட்டு வந்திருந்தனர்.

இது குறித்த தகவல் கிடைத்த வயல் காணி உரிமையாளர் சம்பவ இடத்திற்கு சென்று, சட்டவிரோமதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்தவர்களை தடுத்துள்ளார்.

இதையடுத்து, சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட தரப்பினர் வயல் காணி உரிமையாளரை  சவல் மற்றும் மண்வெட்டியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்னர்.

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களின் தாக்குதலில் கைகளில் பலத்த காயத்திற்குள்ளான நிலையில் மீட்கப்பட்டு சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில், கெற்பேலி, மிருசுவிலைச் சேர்ந்த 30 வயதுடைய பொ.நிமலன் என்பவரே படுகாயமடைந்துள்ளார்.

இப் பகுதியில் தொடர்சியான மணல்கடத்தல் இடம்பெற்று வருகின்ற நிலையில் அதனை தடுத்து நிறுத்தி நிரந்தரமாக மண் வளங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படாமை குறித்து அப்பிரதேச மக்களும், சமூக ஆர்வலர்களும் விசம் தெரிவித்துள்ளனர்.

No comments