Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வெளிநாட்டு பி.சி.ஆர்.சோதனைகள் சில தவறானவை


வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய பெரும்பாலான இலங்கையர்கள் கொண்டுவந்த பி.சி.ஆர்.சோதனை முடிவுகள் தொடர்பான அறிக்கை தவறானவை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறுகையில், “சமீபத்தில் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்த கணிசமான இலங்கையர்கள், கொவிட் -19 க்கு சாதகமாக சோதனை செய்துள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்த 70 இலங்கையர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை, நேர்மறை சோதனை செய்திருந்தனர்.

இதேவேளை சுகாதார அமைச்சின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சுதாத் சமரவீர தெரிவித்ததாவது “72 மணி நேரத்திற்கு முன்னர் நடத்தப்பட்ட எதிர்மறை முடிவுகளைக் கொண்ட பி.சி.ஆர்.சோதனைகளில் பெரும்பாலானவை இலங்கைக்கு வந்தவுடன் நேர்மறையானவை என கண்டறியப்படுகின்றது.

மேலும் வெளிநாடுகளில் நடத்தப்பட்ட சில பி.சி.ஆர்.சோதனைகள் தவறானவையாக காணப்படுகின்றன.  எனவே இவ்விடயத்தில் அதிக கவனம் செலுத்துமாறு கொவிட் -19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி  இந்த விடயத்தில் தற்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நாடு திரும்ப விரும்பும் இலங்கையர்களுக்கு பி.சி.ஆர்.சோதனைகளை நடத்துவதற்கு புகழ்பெற்ற வைத்தியசாலைகளுக்கு மட்டுமே ஒப்புதல் அளிக்க இலங்கை வெளிநாட்டு தூதரகங்களுக்கு ஆலோசனை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும்  இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வைத்தியசாலைகளில் மாத்திரமே, பி.சி.ஆர் சோதனைகளை நடத்த முடியும். எனவே வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருபவர்களுக்கு  இதேபோன்ற முறையை அறிமுகப்படுத்த வேண்டும்.

இந்த முறை அறிமுகப்படுத்தப்படாவிட்டால், அது பி.சி.ஆர் சோதனை முடிவுகளை தவறாக ஏற்படுத்தக்கூடும். பாதிக்கப்பட்ட நபரின் அதே விமானத்தில் பயணிக்கும் மற்ற பயணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments