மறைந்த தென்னிந்திய நடிகர் விவேக்குக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக யாழ்ப்பாணம் இணுவில் இளைஞர்களால் மரக்கன்றுகள் நாட்டப்பட்டன.
ஒரு கோடி மரம் நடுகை செயற்திட்டத்தை நடிகர் விவேக் முன்னெடுத்து வந்திருந்தார். அந்நிலையில் , நேற்று சனிக்கிழமை அவர் காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பலர் மரநடுகை செயற்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். www.tamilnews1.com
இந்நிலையில் வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர்
வரதராஜா தனகோபியின் ஏற்பாட்டில் இணுவில் இளைஞர்கள் மரநடுகையில் இன்று காலை ஈடுபட்டனர். www.tamilnews1.com
அதேவேளை "Jaffna Jaguars" எனும் அமைப்பொன்றினை உருவாக்கி அதில் தன்னார்வமுடைய இளையோரை இணைத்து மரநடுகை செயற்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாகவும் , அதில் ஆர்வமுள்ள இளையோரை இணைந்து கொள்ளுமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
No comments