புதுவருடதினத்தை முன்னிட்டு தூர இடங்களுக்குச் சென்ற மக்கள் மீண்டும் வருவதற்காக இன்று முதல் மேலதிகமாக 3 ஆயிரம் பஸ்கள் சேவையில் ஈடுபடுமென இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
மேலும், இன்று முதல் விசேட பஸ் சேவை இடம்பெறும் என்று மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் விஜித குமார தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்றுக் காரணமாக சேவையில் ஈடுபடாத தனியார் பஸ்களும் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்படும். பயணிகளின் நெரிசல் காணப்படும் பட்சத்தில் மாகாண சபை மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி தற்காலிக அனுமதிப்பத்திரத்தின் கீழ் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுமென திரு.விஜித குமார குறிப்பிட்டார்.
அத்துடன் தூர இடங்களுக்கான ரெயில் சேவையும் வழமை போன்று இன்றுமுதல்இடம்பெறும் என ரெயில்வேத் திணைக்களம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் திங்கட் கிழமை முதல் அனைத்து ரெயில்களும் வழமையான சேவையில் ஈடுபடும் என திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
No comments