சுற்றாடல்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவிற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் வெண்சந்தனக் கன்றொன்று கால்டன் இல்லத்தில் வைத்து இன்று வழங்கப்பட்டது.
தமிழ் சிங்கள புத்தாண்டு சடங்கின் மரக்கன்று நடும் புண்ணிய நிகழ்வு நாளை (16) காலை 6.40 மணிக்கு கிழக்கு நோக்கி இடம்பெறவுள்ளது. இதனை முன்னிட்டு மரக்கன்று நடும் சுபநேரமான நாளைய தினத்தில் நடுவதற்காக இந்த வெண்சந்தனக்கன்று வழங்கப்பட்டது.
இச்சடங்கின் பிரதான நிகழ்வு அகுணுகொலபெலஸ்ஸவில் அமைந்துள்ள சுற்றாடல்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவின் இல்லத்தில் இடம்பெறவுள்ளதுடன், மரக்கன்று நடும் சடங்கு நாடளாவிய ரீதியிலும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments