விளையாட்டு அரங்கு மற்றும் உடற்பயிற்சி மத்திய நிலையங்களை பதிவு செய்வதற்கும், நடத்துவதற்கும் அனுமதி பத்திரத்தை வழங்வது அத்தியாவசியமாகும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதுவரையில் இந்த மத்திய நிலையங்களை ஆரம்பித்து நடத்துவது தொடர்பில் அரசாங்கத்தினால் எந்தவித வழிகாட்டிகளும் அறிவிக்கப்படவில்லை . சௌபாக்கிய தொலைநோக்கு தேசிய கொள்கையின் கீழ் ஆரோக்கியமான இளைஞர் சமூகத்தை உருவாக்குவதே இதன் அடிப்படை நோக்கமாகும் என்றும், இதனை புதிய தொழில்துறையாக அடையாளம் காணமுடியும் என்றும் அமைச்சர் கூறினார்.
இதன்மூலம் இளம் சமூகத்தினருக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்க முடியும் . இதற்கமைவாக விளையாட்டுத்துறை சட்ட விதிகள் தொடர்பில் கவனம் செலுத்தி விளையாட்டு அரங்கு மற்றும் உடற்பயிற்சி மத்திய நிலையங்களுக்கான ஆலோசனைகள் வழிகாட்டி துரிதமாக தயாரிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.
பயனாளிகளுக்கு தேவையான வசதிகளின் கீழ் முறையான சேவையை வழங்குதல் அளவு மற்றும் வழங்கப்படும் கால எல்லைக்குள் அதனை பயன்படுத்தக்கூடிய வகையில் ஆகக்கூடியவர்களை அடிப்படையாக கொண்டு விளையாட்டு அரங்கு உடற்பயிற்சி மத்திய நிலைய பொருட்கள் உலக விளையாட்டு அரங்கு மற்றும் உடற் பயிற்சி மத்திய நிலையம் மற்றும் திறந்த வெளி விளையாட்டு அரங்கு தொடர்பில் தனித்தனியான ரீதியில் கவனத்தில் கொள்ளுதல் இதன் கீழ் இடம்பெறும்.
தனியாக பயிற்சிகளை மேற்கொள்ளக்கூடிய மற்றும் பயிற்றுவிப்பாளர்களின் ஒத்துழைப்பை வழங்கும் வகையில் மத்திய நிலையங்கள் தொடர்பாகவும் தனித்தனியான ரீதியில் கவனத்தில் கொள்ளுதல் என்ற விடயங்களை ஒழுங்குறுத்தப்பட வேண்டும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
கொவிட் - 19 வைரஸ் தொற்று பரவலை தவிர்ப்பதற்காக சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஆலோசனைக்கு அமைவாக இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
No comments