கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பான புதிய கட்டுப்பாடுகள், அறிவுறுத்தல்கள் வெளியாகி 24 மணி நேரத்திற்குள் அதனை மீறும் வகையில் யாழ்.மாவட்ட செயலகம் நடந்து கொண்டுள்ளது.
புதிய சுற்றறிக்கையின் பிரகாரம் சகல வகையான விரும்துபசார நிகழ்வுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்.மாவட்ட செயலக உத்தியோகஸ்த்தர்களின் பங்களிப்புடன் விருந்துபசார நிகழ்வு நடைபெற்றது.
கொரோனாவின் தாக்கம் அதிகாரித்துள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்தும் முகமாக யாழ்.மாவட்ட கொவிட் தடுப்பு செயலணி அவசர கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் நேற்று காலை நடைபெற்றிருந்தது.
குறித்த கலந்துரையாடலில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானிக்கப்பட்டிருந்ததுடன், பொதுமக்கள் அவற்றை பின்பற்றவேண்டும். என இராணுவ தளபதி மற்றும் யாழ்.மாவட்ட செயலர் ஆகியோர் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் கூட்டம் நிறைவடைந்த சில நிமிடங்களில் அதே மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட செயலக நலன்புரி சங்கத்தின் வருடாந்த விருந்துபசார நிகழ்வில் மாவட்ட செயலர், மேலதிக மாவட்ட செயலர், திட்டமிடல் பணிப்பாளர், மற்றும் பல அதிகாரிகள், ஊழியர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருக்கின்றனர்.
அறிவித்தல்களை விடுவோரே அதனை மீறி பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொண்டமை தொடர்பில் பலரும் விசனம் தெரிவித்தனர்.
No comments