Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ஈஸ்டர் தாக்குதலுக்கு மத தீவிரவாதம் காரணமல்ல!

2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு மத தீவிரவாதம் காரணமல்ல. மத தீவிரவாதத்தை ஒரு கருவியாக பயன்படுத்தி தமது அரசியல் அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொள்ள முற்பட்ட சிலரது செயலே அது என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்தார். www.tamilnews1.com 


ஏப்ரல் 21 தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்வதற்காக பொரளை மயானத்தில் நிர்மாணிக்கப்பட்ட நினைவுத் தூபிக்கு நேற்று மலரஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே  அவ்வாறு தெரிவித்தார் 

மேலும் தெரிவிக்கையில் ,   www.tamilnews1.com 

அன்று எமது சகோதரர்களை தாக்கியவர்கள் மத அடிப்படைவாதிகள் அல்லர். அந்த மத அடிப்படைவாதிகளை தமது கை பொம்மைகளாக பயன்படுத்தி, தமது அரசியல் அதிகாரங்களை வலுப்படுத்திக் கொள்ள முன்னின்றவர்களே அதனைச் செய்தனர்.  www.tamilnews1.com 

தமது அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு சில குழுவினர் முன்னெடுத்த முயற்சியின் பிரதிபலனாகவே அதனை நாம் பார்க்கின்றோம். மதத்தையோ, இனத்தையோ, மொழியையோ மற்றொருவரை துன்புறுத்துவதற்காக பயன்படுத்த வேண்டாம் என நாட்டிலுள்ள அனைவரிடமும் கோரிக்கை முன்வைக்கின்றோம்.

அத்துடன் தமது அதிகாரத்தை வலுப்படுத்துவதற்காக ஏனையவர்களை கொலை செய்யும் சிந்தனையிலிருந்து விடுபடுங்கள் என்றார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு மத தீவிரவாதமே காரணம் எனக் குறிப்பிட்டு அரசு 11 அமைப்புகளை தடை செய்து, பலரை கைது செய்துள்ள நிலையிலேயே கர்தினால் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.

No comments