Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். முன்னெடுக்கப்படவுள்ள மரபுச் சுற்றுலா மேம்பாட்டுக்கு ஒத்துழையுங்கள்


யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள மரபுச் சுற்றுலா மேம்பாடு  மற்றும் தொடர்ச்சியாக பேணுதல் என்ற அடிப்படையில்  அனைவரதும் ஒத்துழைப்பினையும் வினைத்திறனாக வழங்க வேண்டும் என மாவட்ட செயலர் ம. பிரதீபன் கோரியுள்ளார்  

யாழ்ப்பாண மாவட்டத்தில் உலக வங்கியினால் எண்ணக்கரு ரீதியாக தெரிவு செய்யப்பட்ட செயற்றிட்டங்கள் தொடர்பாக பங்குதாரர்களுடனான  கலந்துரையாடல் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு கோரினர். 

வடக்கு கிழக்கு மாகாணங்களின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில்  உட்கட்டுமாணம்  மற்றும் சுற்றுலாத்துறையினை விருத்தி செய்தல் தொடர்பிலான ஜனாதிபதியின் வழிகாட்டலுக்கு அமைவாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் உலக  வங்கியினால் உட்கட்டுமாணம் மற்றும் சுற்றுலா அபிவிருத்தியுடன் தொடர்புபடும் வகையில் பின்வரும் செயற்றிட்டங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

1.யாழ்ப்பாண கோட்டை மற்றும் பண்ணை கரையோர பூங்கா அபிவிருத்தி

2.யாழ்ப்பாண பழைய கச்சேரியும் அதன் சூழல் அபிவிருத்தி

3.சிறுத்தீவு சுற்றுலா அபிவிருத்தி

4.குருநகர் மீன்பிடி படகுத்தள அபிவிருத்தி

5.யாழ்ப்பாண நகர வடிகால் அமைப்புச் செயற்றிட்டம்

6.யாழ்ப்பாண நகர கழிவு நீர் முகாமைத்துவ செயற்றிட்டம்

7.நெடுந்தீவு வீதி அபிவிருத்தி மற்றும் குடிநீர் விநியோக மேம்பாடு

8.நெடுந்தீவு, குறிகட்டுவான், ஊர்காவற்றுறை, காரைநகர் படகுத்தளங்களின் அபிவிருத்தி

மேற்படி திட்டங்களின் விரிவான செயற்றிட்டங்கள் மற்றும் மதிப்பீட்டுகள் தயாரித்தல், சாத்திய நிலமைகள், பங்குதாரர்கள் பங்களிப்பு போன்றவை தொடர்பாக கலந்துரையிடலில் மாவட்ட செயலரின் தலைமையில் ஆராயப்பட்டது. 

இதன் போது கருத்து தெரிவித்த மாவட்ட செயலர், 

இத் திட்டங்கள் மக்களுக்குரிய செயற்றிட்டங்கள்எனவும், எல்லாத் தரப்பினருக்கும் உரிய செயற்றிட்டங்கள் என்பதாலும் - மரபுச் சுற்றுலா மேம்பாடு  மற்றும் தொடர்ச்சியாக பேணுதல் என்ற அடிப்படையில்  அனைவரதும் ஒத்துழைப்பினையும் வினைத்திறனாக வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.

இக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக செயலர்  (காணி), மாவட்ட பிரதம பொறியியலாளர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், யாழ்ப்பாணம், நெடுந்தீவு,  மற்றும் ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர்கள், காரைநகர் உதவிப் பிரதேச செயலாளர், யாழ்ப்பாண மாநகர பிரதம பொறியியலாளர், நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள், தொல்லியல் திணைக்கள அதிகாரிகள், பல்கலைக்கழக வரலாற்றுத் துறைத் தலைவர், துறைசார் உயர்அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.





No comments