பயணக் கட்டுப்பாடுகள் மே 25ஆம் திகதி நீக்கப்பட்டாலும் அன்றைய தினம் அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படும் என்று மதுவரித் திணைக்களம் பேச்சாளர் கபிலா குமாரசிங்க அறிவித்துள்ளார். www.tamilnews1.com
நாட்டில் நேற்றிரவு 11 மணிக்கு நடைமுறைக்கு வந்த பயணத் தடை வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு நீக்கப்பட்டு மீளவும் அன்றிரவு 11 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படும். மீளவும் மே 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு நீக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
www.tamilnews1.com









No comments