Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ஏனையவர்களின் பாதுகாப்பிற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுங்கள்!


புத்த பெருமானின் போதனைகளின்படி, ஏனைய மனிதர்களின் உயிர்களின் பாதுகாப்பிற்கும் நல்வாழ்விற்கும் அர்ப்பணிப்புடன் செயற்படுவது இந்த தொற்றுநோய் நிலைமைகளுக்கு மத்தியில் எமது சமூக கடமையாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

விசாக பூராணை தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த செய்தியில் மேலும் தெரிவித்துள்ள ஜனாதிபதி, “உலகெங்கிலும் வாழும் பௌத்த மக்கள் இந்த புனித நாளில், புத்த பெருமான் மீதான பக்தியுடன் புண்ணிய கிரியைகளில் ஈடுபடுகின்றனர்.

புத்த பெருமானின் போதனைகளுக்கு ஏற்ப வாழ்க்கையை வடிவமைத்து ஈருலக முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதும் பிள்ளைகளுடன் சேர்ந்து வெசாக் காலத்தில் சமயச் சடங்குகளை செய்வதும் பழங்காலத்திலிருந்தே பின்பற்றப்பட்டு வரும் பௌத்த பாரம்பரியமாகும்.

கடந்த வருடத்தைப் போலவே, இந்த வருடமும் உலகளாவிய கொரோனா தொற்றுநோய் காரணமாக சுகாதாரத் துறையின் பரிந்துரைகளின் பேரில் கூட்டு சமயக் கிரியைகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை தற்காலிகமாக இடைநிறுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது.

எனினும் மூன்று உன்னத விழாக்களை நினைவுகூர்ந்து தத்தமது வீடுகளில் தங்கியிருந்து சமயக் கிரியைகளில் ஈடுபடுவதற்கு அதனை தடையாக கொள்ளத்தேவையில்லை.

அனைத்து உயிரினங்கள் மீதும் கருணையை பரப்பும் புத்த பெருமானின் போதனைகளின் படி, ஏனைய மனிதர்களின் உயிர்களின் பாதுகாப்பிற்கும் நல்வாழ்விற்கும் அர்ப்பணிப்புடன் செயற்படுவது இந்த தொற்றுநோய் நிலைமைகளுக்கு மத்தியில் எமது சமூக கடமையாகும்.

அத்துடன், பௌத்தர்களின் இந்த உயர்ந்த பண்பினை உலகிற்கு முன்னுதாரணமாக எடுத்துக்காட்டுவதற்கும் இது சிறந்த சந்தர்ப்பமாகும்” என ஜனாதிபதி தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்

No comments