ஐபோன்கள் மற்றும் ஐபாட்கள் விற்பனைக்குள்ளதென அதனை வாங்குவதற்கு ஓடர்செய்த பணத்தை மோசடி செய்ததாக சந்தேகநபர்கள் இருவரை கொள்ளுப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளதாக பிரதிப்பொலிஸ்மா அதிபரும் பொலிஸ் ஊடகப்பேச்சாளருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
கொள்ளுப்பிட்டிய காலி வீதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்கு ஐபோன்கள் மற்றும் ஐபாட்களை வாங்க பணம் கொடுத்ததாக 70 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்ததாக தெரிவித்தார்.
முறைப்பாடு அளித்தவர்கள் தங்களுக்கு ஓடர் செய்யப்பட்ட பொருட்கள் கிடைக்கவில்லை என்று தெரிவித்தனர்.
இதையடுத்து விசாரணையின் போது சந்தேக நபர்களுக்கு Apple Inc அல்லது அத்தகைய தயாரிப்புகளை கையாளும் வேறு எந்த முகவருடனும் எந்த தொடர்பும் இல்லை என்பது தெரியவந்தது.
சந்தேக நபர்கள் வாடிக்கையாளர்களை வேண்டுமென்றே ஏமாற்றி பணம் மோசடி செய்துள்ளதாக பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.
சந்தேக நபர்கள் 27 மற்றும் 29 வயதுடையவர்கள் எனவும் மொறட்டுவ மற்றும் மோதரவில் வசிப்பவர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.









No comments