திட்டமிட்ட குற்ற செயல்கள் மற்றும் போதை பொருள் வர்த்தகம் என்பவற்றுடன் தொடர்புடைய பாதாள உலக குழுவை சேர்ந்த கொஸ்கொட தாரக என அழைக்கப்படும் , தாரக பெரேரா விஜயசேகர இன்று காலை பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
மீரிகம பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது ,
குறித்த நபர் போலியகொட விசேட குற்றவியல் பிரிவினரின் தடுப்பு காவலில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் , அவர் பதுக்கி வைத்திருந்ததாக கூறப்பட்ட ஆயுதங்கள் சிலவற்றை மீட்பதற்காக மீரிகம பகுதிக்கு தாம் அழைத்து சென்ற போது, அங்கு தம்மை தாக்கி விட்டு தப்பி செல்ல முற்பட்ட போது மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி உயிரிழந்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை நேற்று முன்தினம் நவகமுவ பிரதேசத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் பாதாள உலக குழுவை சேர்ந்த ஊரு ஜுவா என அழைக்கப்படும் மேலேன் மபுலா உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments