Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கொரோனா தொற்றாளர் வீதியில் நின்று புதினம் விசாரிப்பு!


கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட நபர் தனது வீட்டு வாசலில் நின்று வீதியால் செல்லும் நபர்களை மறித்து கதைப்பதனால், அவ்வீதி  வழியாக செல்பவர்கள் அச்சம் காரணமாக வேறு வீதிகள் ஊடாக பயணிக்கின்றனர்.  www.tamilnews1.com 

சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, 

சாவகச்சேரி நகர் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து அவரை வீட்டில் தனிமைப்படுத்திய சுகாதார பிரிவினர், அவரை சிகிச்சை நிலையத்திற்கு அழைத்து செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அவரை சிகிச்சை நிலையத்திற்கு அழைத்து செல்ல வாகனம் இல்லாமையினால் அவர் வீட்டிலையே தங்க வைக்கப்பட்டுள்ளார்.  www.tamilnews1.com 

இந்நிலையில் அந்நபர் நேற்றைய தினம் வீட்டின் முன்பாக வீதியில் நின்று தனக்கு அறிமுகமானவர்களை வழிமறித்து புதினம் விசாரித்துள்ளார். 
இதனை அறிந்த பலரும் அவ்வீதி வழியாக பயணிப்பதை தவிர்த்து வேறு வீதிகள் ஊடாக பயணித்துள்ளனர். www.tamilnews1.com 

அதேவேளை ஒரு சிலர் அவருக்கு தொற்று கண்டறியப்பட்டமை அறியாது நின்று உரையாடியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.  www.tamilnews1.com 

No comments