Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். 7251 குடும்பங்களுக்கு 10ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர்உணவு பொதிகள்!


தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கான 10ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொதிகள் இதுவரையில் யாழில் 7251 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலர் க. மகேசன் தெரிவித்துள்ளார். 

யாழில்.இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,  www.tamilnews1.com 
 
தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியதன் அடிப்படையில் சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தலுக்கு அமைய வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்ட  குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும்,  இடைக்கால நிவாரண உதவியாக அந்த 10 ஆயிரம் ரூபா பெறுமதியான உணவு பொதியை  மாவட்ட செயலகத்தின் வழிகாட்டுதலின் கீழ் பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்கி வருகின்றோம்.  www.tamilnews1.com 
 
அதன் அடிப்படையில் யாழ் மாவட்டத்தில் இன்று வரை சுமார் 7251 குடும்பங்களுக்கு  அரசினால் வழங்கப்படும் 10 ஆயிரம் ரூபா  பெறுமதி கொண்ட உணவு பொதி தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.   www.tamilnews1.com 
 
தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இந்த உதவி  வழங்கப்பட்டு வருகின்றது.   www.tamilnews1.com 
 
இந்த குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டு  இருக்கும்  காலத்தில் எமக்கு உரிய விபரங்கள் கிடைக்கப்பெற்றவுடன் அவர்களுக்கு  அது கிடைக்கும். அதாவது விபரங்கள் கிடைக்கப்பெறுவதன் அடிப்படையிலேயே, உதவிப் பொருட்களை வழங்க முடியும்.   www.tamilnews1.com 
 
 இந்த விடயம் தொடர்பில் சகல பிரதேச செயலர்களுக்கும் உரியவரான அறிவுறுத்தல்கள் எம்மால் வழங்கப்பட்டுள்ளன. எனவே தனி தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கான உதவிகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றது என தெரிவித்தார்.  www.tamilnews1.com 

No comments