Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கட்டுப்பாட்டை மீறி திறக்கப்பட்ட மதுபான சாலை ; மூவர் கைது!




கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  திருநெல்வேலி கிழக்கு பகுதியில் அரசின்  கட்டுப்பாடுகளை மீறி  திறக்கப்பட்ட மதுபானசாலை யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று முற்றுகையிடப்பட்டது. 

 முற்றுகையின்  போது சட்டவிரோதமாக மதுபான கொள்வனவுக்கு வந்த  ஒருவரும், மதுபானசாலை முகாமையாளர் மற்றும் மதுபானம்  விற்பனை செய்தவர் என மூவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு விற்பனைக்கு தயாராக இருந்த ஒரு தொகுதி மதுபானங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
 
கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைக்காக கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். www.tamilnews1.com 
 
குறித்த மதுபானசாலை அவனது கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் இருந்து 500 மீற்றர் தூரத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. www.tamilnews1.com 

No comments