Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மக்களின் ஒத்துழைப்பு போதாமையுள்ளது ; இராணுவ யாழ்.மாவட்ட தளபதி கவலை!


பயண கட்டுப்பாடு அமுலில் உள்ள போது யாழ்ப்பாண மாவட்ட மக்கள் வீடுகளில் இருங்கள் என யாழ்ப்பாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா தெரிவித்துள்ளார். www.tamilnews1.com 

தற்போதைய நிலைமை தொடர்பில் இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். www.tamilnews1.com 

மேலும் தெரிவிக்கையில்,  www.tamilnews1.com 

யாழ்ப்பாண மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணியின்  இணைப்பாளர் என்ற ரீதியில், யாழில் தற்போதுள்ள கொரோனா  நிலைமை தொடர்பில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசிய நிலை காணப்படுகின்றது. www.tamilnews1.com 

யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்பொழுது கொரோனா தொற்று  நிலைமையானது  ஏனைய இடங்களோடு ஒப்பிடும்போது கட்டுப்பாட்டில் உள்ளது.   www.tamilnews1.com 

யாழ். மாவட்டத்தைப் பொறுத்தவரை கடந்த வருடம்  கொரோனா 1வது   அலையில் 17 தொற்றாளர்களும், இரண்டாவது அலையில் 890 தொற்றாளர்களும், தற்போதுள்ள மூன்றாவது அலையில் 1398 நபர்கள் கொரோனா தொற்றாளர்களாக  இனங்காணப்பட்டுள்ளார்கள்.

 எனினும் யாழ் மாவட்ட கொரோனா தடுப்பு செயலின் இணைப்பாளர் என்ற அடிப்படையிலும், யாழ் மாவட்ட  இராணுவ கட்டளைத் தளபதி என்ற  அடிப்படையிலும், யாழில்  கொரோனா தொற்று பரவலை  கட்டுப்படுத்த பல்வேறு பட்ட செயற்பாட்டினை  இராணுவத்தினரின்  மூலம் முன்னெடுகின்றோம்.  எனினும் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமான ஒன்றாக காணப்படுகின்றது. எனினும் பொதுமக்களின் ஒத்துழைப்பு போதாமையாகவுள்ளது        www.tamilnews1.com 

யாழ்ப்பாண மாவட்ட மக்கள் பயண கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் தேவையற்று வீதிகளில் நடமாடாது. வீடுகளில் இருங்கள் அத்தோடு உங்களுக்கு ஏதாவது கொரோனா நோய் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெறுங்கள். அவ்வாறு செயற்படுவதன் மூலம் உங்களையும் உங்கள் சமூகத்தையும் பாதுகாத்துக்கொள்ள முடியும் என தெரிவித்தார்.

No comments