யாழ்ப்பாணம் நகரில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியவர்கள் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
முகக்கவசம் அணியாதோர், சமூக இடைவெளியைப் பேணாதவர்களை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெர்னான்டோவின் அறிவுறுத்தலில் சிறப்பு நடவடிக்கை இன்று யாழ்ப்பாணம் மாநகரில் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 20 பேர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு கடுமையான எச்சரிக்கையின் பின் விடுவிக்கப்பட்டனர்.








No comments