Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நீதிமன்ற நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பில் நீதி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை

 

கொவிட் 19 வைரசு தொற்று பரவல் காரணமாக நீதிமன்ற நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பாக எடுக்கப்படுகின்ற ஏதேனும் தீர்மானங்களை மக்களுக்கு அறிவிப்பது, நீதிச்சேவை ஆணைக்குழுவின் மூலம் அல்லது இந்த ஆணைக்குழுவின் அனுமதியுடன் நீதி அமைச்சினாலேயாகும் என நீதி அமைச்சினால் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக covid-19 வைரஸ் பரவல் காரணமாக நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பாக அல்லது நீதி அமைச்சின் செயற்பாடுகள் தொடர்பாக வேறு தரப்பினரினால் மேற்கொள்ளப்படுகின்ற அறிக்கைகள் அதிகார பூர்வமானது அல்ல என்பதுடன், கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக நீதிமன்ற நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பாக எடுக்கப்படுகின்ற தீர்மானங்கள் கீழே குறிப்பிட்டுள்ள நீதிச்சேவை ஆணைக்குழுவின் அல்லது உயர் நீதிமன்றத்தின் இணையத்தளத்தினூடாக அறிவிக்கப்படும் என்றும் குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிச்சேவை ஆணைக்குழு -  www.gov.lk

உயர் நீதிமன்றம் - www.supremecourt.lk


No comments