முல்லைத்தீவு குருந்தூர் மலையில் பௌத்த வழிப்பாட்டு நிகழ்வொன்று நேற்று திங்கட்கிழமை பெருமெடுப்பில் நடைபெற்றதாக தெரியவருகிறது.
பல பிக்குகள் , இராணுவத்தினர் மற்றும் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டவர்களுடன் குறித்த வழிப்பாட்டு நிகழ்வு நடைபெற்றதுள்ளது. www.tamilnews1.com
குறித்த நிகழ்வுக்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படாதமையால் நிகழ்வு குறித்து மேலதிக தகவல்களை அறிய முடியவில்லை. www.tamilnews1.com
குருந்தூர் மலையில் புராதன பௌத்த விகாரை காணப்பட்டதாக தொல்லியல் திணைக்களம் அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் அப்பகுதியில் புதிய விகாரை ஒன்றினை அமைத்து வழிபாடுகளை மேற்கொள்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக உள்ளூர் வாசிகள் மத்தியில் சந்தேகம் நிலவி வரும் நிலையில் நேற்றைய தினம் உள்ளூர் வாசிகளுக்கோ , ஊடகங்களுக்கோ அனுமதி வழங்கப்படாத நிலையில் வழிபாட்டு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு புதிய விகாரைக்கான அடித்தளமாக இருக்கலாம் என பரவலான சந்தேகம் எழுந்துள்ளது.
இதேவேளை நாட்டில் கொரோனா நோய் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் , மத வழிப்பாட்டிடங்களில் 50 பேருக்கு மேல் கூடி வழிபாடு மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்ட சுகாதார பிரிவினருக்கு எவ்வித அனுமதியும் பெறாது இந்நிகழ்வு நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. www.tamilnews1.com
No comments