Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ஊரடங்கு தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் தீர்மானிக்கவில்லை!

 


இலங்கையில் இரவு வேளையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பது தொடர்பாக அரசாங்கம் இதுவரையில் தீர்மானிக்கவில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

கொரோனா பரவலைக் கருத்திற்கொண்டு நாட்டில் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின.

அத்தோடு, இந்த விடயம் குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகுமென்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த விடயம் குறித்து ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, அந்த தகவல் உண்மைக்கு புறம்பானது என்றும்  ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பது தொடர்பாக அரசாங்கம் இதுவரையில் தீர்மானிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

No comments