எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தத்தின் காரணமாக சமுத்திர சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருந்த போதிலும் மீன் உள்ளிட்ட கடலுணவை உட்கொள்வதில் மக்கள் எந்தவகையிலும் அச்சமடைய தேவையில்லை என்று கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும்,நீர்கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களில் ஒரு நாள் மீன்பிடி வள்ளங்களின் நடவடிக்கைகளுக்கு மறு அறிவித்தல் வரையில் தடை விதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ,இந்த பிரதேசங்களைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களுக்கு நிவாரண கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார









No comments