கொரோனா சுகாதார விதிமுறைகளை மீறி ஆலயத்தில் திருவிழா நடத்திய உபாயக்காரர் உள்ளிட்ட நான்கு பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
காரைநகர் களபூமி பகுதியில் உள்ள ஆலயத்தில் வருடாந்திர மகோற்சவம் நடைபெற்று வருகின்றது. நாளைய தினம் தேர் திருவிழா நடைபெறவுள்ள நிலையில் இன்றைய தினம் சப்பர திருவிழா நடைபெற்றது. www.tamilnews1.com
காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் காரைநகர் பொது சுகாதார பரிசோதகர் ஆகியோரின் அறிவுறுத்தல்களை மீறி ஆலயத்தில் பெருமளவானோர் சப்பர திருவிழாவில் கூடியிருந்தனர். www.tamilnews1.com
சுகாதார விதிமுறைகள் , கட்டுப்பாடுகளை மீறி 50க்கும் மேற்பட்டோர் உரிய முறையில் முக கவசங்கள் இன்றியும் , சமூக இடைவெளிகளை பேணாதும் திருவிழாவில் கூடி இருந்துள்ளனர். www.tamilnews1.com
அதனை அடுத்து, ஆலயத்திற்கு சென்றிருந்த சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொது சுகாதார பரிசோதகர் உள்ளிட்டோர் ஆலய திருவிழா வினை நிறுத்தி, ஆலய குருக்கள் , உபாயக்காரர் , ஆலய நிர்வாகத்தை சேர்ந்தோர் உள்ளிட்ட நான்கு பேரை தனிமைப்படுத்தி உள்ளனர்.
www.tamilnews1.com www.tamilnews1.com www.tamilnews1.com www.tamilnews1.com www.tamilnews1.com







No comments