யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் அமைந்துள்ள ஆலயத்தில் பூஜை வழிப்பாடுகளில் ஈடுபட்டிருந்த பூசகர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். www.tamilnews1.com
கொடிகாமம் வரணி வடக்கு பகுதியில் உள்ள ஆலயத்தில் முழுநேர பயண தடை அமுலில் இருக்கும் போது பூஜை வழிபாடுகள் இடம்பெறுவதாக கொடிகாம பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து , ஆலயத்திற்கு சென்ற பொலிஸார் பூஜை வழிபாட்டில் ஈடுபட்டிருந்த பூசகர் உள்ளிட்ட மூவரை கைது செய்தனர். www.tamilnews1.com
கைது செய்யப்பட்ட மூவரையும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் கடுமையாக எச்சரித்து , பொலிஸ் பிணையில் விடுவித்தனர். www.tamilnews1.com









No comments